மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கியதில் சிறுவன் பலி!


 மட்டக்களப்பு, சின்ன ஊறணி பகுதியில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது.

சின்னஊறணி 3 ஆம் குறுக்கு வீதியைச் சோந்த தரம் 2 இல் கல்வி கற்கும் 6 வயதுடைய விநாயகம் விதுஷன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

வீட்டு நிர்மாணப் பணிகளின்போது தவறுதலாக மின்சார வயர் ஒன்றை சிறுவன் பிடித்ததையடுத்து, மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளான்.

பின்னர் உறவினர்கள் சிறுவனை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளான்.

மட்டக்களப்பு நீதவானின் உத்தரவையடுத்து சிறுவனின் சடலம் பிரதேச பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

No comments