சக்தி,சிரசவை மூட கோத்தா குழு மும்முரம்!சக்தி மற்றும் சிரச ஊடக வலையமைப்பின் ஒளிப்பரப்பு அனுமதிப்பத்திரத்தை சட்ட நடவடிக்கையின் ஊடாக பறிப்பதற்கான முயற்சிகள் தொடர்வதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சக்தி, சிரச ஊடக சுதந்திரத்தை ஆதரித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிக்கள், ஆர்ப்பாட்டமொன்றை கொழும்பில் நடத்தினர். இதில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் எம்.பியுமான மனோ கணேசன் மற்றும் கொழும்பு மாவட்ட எம்.பியான முஜிபுர் ரஹ்மான் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். 

சிரச, சக்தி, சியத நிறுவனங்களை தாக்கியழித்த கறுப்பு வரலாறும், ஊடக நிறுவன உரிமங்களை அரசியல் நோக்கில் வழங்கிய, ரத்து செய்த வரலாறும் இந்த ஆட்சியாளருக்கு இருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ள மனோ கணேசன், ஆனால், மீண்டும் இந்த வரலாறு திரும்ப முடியாது. நாம் உறுதியாக சிரச,சக்தி ஊடக சுதந்திரத்தை ஆதரித்து நிற்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

சக்தி மற்றும் சிரச ஊடக வலையமைப்பின் ஒளிப்பரப்பு அனுமதிப்பத்திரத்தை சட்ட நடவடிக்கையின் ஊடாக பறிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியினர், பாராளுமன்றத்தில் நேற்று (07) கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். இதனால், சபைக்குள் அமளி துமளி ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments