இலங்கை நாடாளுமன்றம்:ராஜபக்சக்கள் மயம்!

இலங்கையின் அமைச்சரவையில் ஐந்தாவது ராஜபக்சவா பஸில் இன்று பதவியேற்றுள்ளார். பசில் ராஜபக்ச நிதி, பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துள்ள நிலையில் இத்துடன், அமைச்சரவையில் ஐந்தாவது ராஜபக்ச உறுப்பினராக பசில் ராஜபக்ச வலம்வரவுள்ளார்.

அமைச்சரவையின் பிரதானியாக கோட்டாபய ராஜபக்ச உள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன்

நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்சவும், 

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவும் பதவி வகிக்கின்றனர்.

தற்போது புதிதாக பசில் ராஜபக்ச நிதியமைச்சராக பதவியேற்கிறார்.

இதனைத்தவிர சசிந்திர ராஜபக்ச இராஜாங்க அமைச்சராக பதவி வகிக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments