கூட்டு வேண்டாம்: தமிழரசு!தமிழ் கட்சிகளது கூட்டை உடைப்பதில் தமிழரசுக்கட்சி தொடர்ந்து முனைப்பு காட்டியே வருகின்றது.

ஏற்கனவே தமிழ் கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமை முயற்சிக்கான கூட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது, ஏன் அவசரமாக மீண்டும் ஒரு கூட்டு முயற்சிக்கான கூட்டங்கள் இடம்பெறுவதாக தமிழரசுக்கட்சியை சேர்ந்த சி.வி.கே.சிவஞானம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்றைய தினம் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன், அண்மையில் நடந்த ஒற்றுமைக்கான அனைத்து கட்சிகளின் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் சார்பில் சி.வி கே சிவஞானம் கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டதாகவும், இறுதியில் வருகை தராது விலகிவிட்டதாகவும் குற்றஞ்சுமத்தியிருந்தார்.

எனினும் குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கட்சியின் தலைவரோ அல்லது கட்சியோ பணிக்கவில்லை. அதன் காரணமாகவே தான் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.


No comments