வடக்கில் ஆள் தேடும் ஜேவிபி!

 
இலங்கை பூராகவும் அதிபர், ஆசிரியர்களால்  மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டத்துக்கு வடமாகாண அதிபர், ஆசிரியர்களும் பூரண ஒத்துழைப்பை வழங்க ஜேவிபி சார்பு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அழைப்புவிடுத்துள்ளது.

தொடரும் போராட்டத்திற்கான தமது ஆதரவை தெரிவித்த இலங்கை ஆசிரியர்சேவை சங்கத்தின் செயலாளர் புயல்நேசன், அதேபோல் வடமாகாண அதிபர், ஆசிரியர்களும் குறித்த போராட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனவும் கோரியுள்ளார்.

கொத்தலாவலை இராணுவ பல்கலைக்கழக சட்டமூலத்தை நிறுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே இலங்கை பூராகவும் அதிபர், ஆசிரியர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


No comments