முல்லையில் ஈஸ்டர் தாக்குதலாளி:டெலோவிற்கும் கண்டம்!புதுக்குடியிருப்பு கடத்தல் மரங்களுடன் பொலிசாரால் கைதானவர் ஈஸ்டர் குண்டு தாக்குதலுடன் தொடர்புடையவர் என தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதனையடுத்து தீவிர விசாரணையில் புதுக்குடியிருப்பு பொலிசார் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே டெலோ அமைப்பினால் தமிழ்த் தேசிய வீரர்கள் தினம் ஜூலை 25 தொடக்கம் 27 வரை என நினைவுகூரப்பட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் பல இடங்களில் ஒட்டப்பட்ட பதாகைகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதில் பல பதாகைகள் கிழித்து எறியப்பட்டுள்ளதுடன், இது தொடர்பிலான கண்காணிக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (டெலோ) கட்சியின் ஏற்பாட்டில், வெலிக்கடை சிறைப்படுகொலையின் போது உயிரிழந்த குட்டிமணி, தங்கத்துரை உள்ளிட்ட 53 அரசியல் கைதிகளின் 38ஆம் ஆண்டு நினைவேந்தலை அனுஷ்டிக்கும் வகையில் இந்த பதாகைகள் ஒட்டப்பட்டுள்ளன.


No comments