சிறீலங்கன் ஏயர்லைன்: மேலும் பத்தாயிரம் கோடி?

இவ்வாண்டின் ஜீன் வரை 27ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்து வரும் சிறீலங்கன் ஏயர்லைன்ஸ{க்கு மேலும் பத்தாயிரம் கோடி (10,000) பணத்தை

அள்ளி வழங்க கோத்தபாய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. 

இதிலிருந்து ஏற்கனவே 4,800 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைக் கூட இறக்குமதி செய்ய முடியாமல் பொருளாதாரம் தரையிறங்கியுள்ள ஒரு தருணத்தில், 27ஆயிரம் கோடிக்கும் அதிகமான இழப்பில் இருக்கும் இந்த 'வெள்ளை யானையை' பராமரிக்க அமைச்சர்கள் வாரியம் மேலும் பத்தாயிரம் கோடி (10,000) ஒப்புதல் அளித்துள்ளமை அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.

மஹிந்த ராஜபக்ச குடும்பத்தில் ஆளுகைக்குள் இருக்கின்ற இலங்கை ஏர்லைன்ஸ், 2021 ஜூன் மாத இறுதியில், மொத்த இழப்பு சுமார் 27,000 கோடி ரூபாய்.

இலங்கை ஏர்லைன்ஸ் தினமும் கோடிகளில் இழப்புகளைச் சந்திக்கும்போது கூட பாணிற்கு கூட வரி செலுத்தும் ஏழை மக்களின் வரிப்பணம் வீணாக விரயமாக்கப்படுகின்றமை கேள்விகளை தோற்றுவித்துள்ளது.


No comments