சக்தி – சிரஸ ஊடக குழும பிரதானி கொவிட்டினால் மரணம்!

 


கொழும்பு ஊடகப்பரப்பின் பரபரப்பு மிக்க ஊடக பிரதானிகளுள் ஒருவரான ராஜமகேந்திரன் மரணமடைந்துள்ளார்.

இலங்கையின் ஆட்சியாளர்களிற்து தலையிடி கொடுத்து வந்திருந்த நிலையில் அவரை முடக்க அரசு அழுத்தங்களை இன்னொருபுறம் வழங்கிவந்திருந்தது.

இந்நிலையிலேயே சக்தி – சிரஸ ஊடக குழுமங்களின் உரிமையாளரும் கபிட்டல் மகாராஜா நிறுவனத்தின் கூட்டுப்பணிப்பாளருமான “கிளி” ராஜமகேந்திரன் காலமானார்.

கோவிட் தொற்றுக்கு உள்ளாகி பத்து நாட்களாக நவலோகா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த இவர், கடந்த மூன்று நாட்களாக கோமா நிலைக்கு சென்றிருந்தார்.

யாழ்ப்பாணம் மானிப்பாயினை சேர்ந்த மகாதேவா ராஜேந்திரன் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட மகாராஜா நிறுவனத்தை, 1983 ற்குப்பின்னர், ராஜேந்திரத்தின் மகன் ராஜமகேந்திரன் நடத்திவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ராஜேந்திரத்தின் இன்னொரு மகன் மகாராஜா கனடாவின் மெல்பேர்னை சேர்ந்தவராவார்.


No comments