முல்லையில் ஈருறுளியில் சென்றவர் வீதியில் சடலமாகக் கிடந்தார்


முல்லைத்தீவு முள்ளியவளைப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு ஈருறுளியில் சென்றவர் தீடிரென வீதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் முள்ளியவளை 3 ஆம் வட்டாரத்தை சேர்ந்த 74 வயதுடைய நடராசா சிவராசா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவரின் உடல், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த உடலம் பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கபடவுள்ளது.

No comments