அராலியில் வாள்வெட்டுக்குழு வீடு புகுந்த அட்டகாசம்!!


யாழ்.வட்டுக்கோட்டை அராலி வடக்கு பகுதியில்  உள்ள வீடொன்றில் வாள்வெட்டுக் குழுவினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று வியாழக்கிழமை இரவு 10.45 மணியளவில் இரண்டு உந்துருளிகளில் வாள்கள் மற்று இரும்புக் கம்பிகளுடன் வந்த நால்வர் வீட்டு ஜன்னலின் கண்ணாடிகள் மற்றும் முச்சக்கரவண்டியின் கண்ணாடியினை உடைத்து சேதப்படுத்தியதுடன் முக்சக்கரவண்டிக்கு தீ மூட்டியுள்ளனர்.வீட்டில் உள்ளவர்கள் தூக்கத்தில் இருந்தவேளை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் நிகழும்போது விழித்துக்கொண்ட வீட்டுக்காரர்களும் அயல்வீட்டினரும் துரத்தியவேளை அவர்கள் தப்பித்துச் சென்றுள்ளனர்.

No comments