ஊடகங்களை பாதுகாக்க ஜதேக வருகின்றது!



சுதந்திரமாக கருத்துக்களை வெளியிடும் ஊடகவியலாளர்கள் அண்மை காலமாக அரசியல் ரீதியாகவும் உயர் பொலிஸ் அதிகாரிகளாலும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகின்றமையை வன்மையாகக் கண்டிப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்களின் கருத்து சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

சுதந்திரமாக கருத்துக்களை வெளியிடும் ஊடகவியலாளர்களும், சமூக வலைத்தள ஊடகவியலாளர்களும் கடந்த காலங்களில் இராஜதந்திர ரீதியிலும் உயர் பொலிஸ் அதிகரிகளினதும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகின்றமையை ஐக்கிய தேசிய கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

எனவே ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக கருத்து தெரிவிப்பதற்கான உரிமையை பாதுகாப்பதற்கு கடந்த காலங்களில் முன்னின்று செயற்பட்டதைப் போன்று எதிர்காலத்திலும் செயற்படும்.

ஊடகவியலாளர்களை பாரிய நெருக்கடிக்கு உள்ளாக்கும் குற்றவியல் சட்டத்தை சட்டத்திலிருந்து நீக்குவதற்கு பாடுபட்டவர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க என்பதை பலரும் தற்போது மறந்து விட்டனர்.

எவ்வாறிருப்பினும் கடந்த காலத்திலும் , நிகழ்காலத்திலும் , எதிர்காலத்திலும் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்கும் அதற்கான உரிமையை ஸ்திரப்படுத்துவதற்கும் ஐக்கிய தேசிய கட்சி அர்ப்பணிப்புடன் செயற்படும்.

எனவே தற்போது ஊடகவியலாளர்களுக்கு விடுக்கப்படுகின்ற அச்சுறுத்தல்கள் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி கடும் கண்டனத்தை வெளியிடுகிறது.








No comments