கிளிநொச்சியில் அக்கிராயனுக்கு வணக்கம் செலுத்தத் தடை!! மாலையும் பறிக்கப்பட்டது!

கிளிநொச்சியில் அக்கராயன் பகுதியில் குறுநில மன்னன் அக்கிராசனுக்கு வணக்கம் செலுத்தச் சென்றவர்கள் காவல்துறையினரால் தடுத்து

நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் சற்று பதற்றம் நிலவியது.

13 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த குறுநிலமன்னர் அக்கிராயனுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு யூலை 5 நாள் சிலை நிறுவப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. சிலை திறக்கப்ட்ட நாளில் அவருக்கு வணக்கம் செலுத்த ஏப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குறித்த நிகழ்வுக்கு கரைச்சி பிரதேசசபை தவிசாளர், பிரதேசசபை உறுப்பினர்கள், கிராமத்து மக்கள் என பலரும் கிளிநொச்சி அக்கராயன் அம்பலப்பெருமாள் சந்தியில் நிறுவப்பட்ட சிலை முன் ஒன்றுகூடியபோது காவல்துறையினர் குறித்த நிகழ்வை நடத்த விடாது தடுத்துள்ளனர்.

கரும்புலிகள் நாளான இன்று குறித்த நிகழ்வைச் செய்ய அனுமதிக்க முடியாது எனக் காவல்துறையினரால் விளக்கம் அளிக்கப்பட்ட போதும் அதனை அங்கிருந்தவர்கள் ஏற்க மறுத்துள்ளனர். காவல்துறையினரின் தடையை மீறி குறுநில மன்னன் அக்கிராயனுக்கு வணக்கம் செலுத்த முற்பட்ட போது காவல்துறையினரால் வணக்கம் செலுத்தக் கொண்டு சென்ற மலர் மாலை பறித்தெடுக்கப்பட்டு தேசமாக்கப்பட்டது. இச்செயலால் அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டிருந்தது. 

கிளிநொச்சியில் அக்கராயன் குளத்தை ஆட்சி செய்த குறுநில மன்னர் அக்கிராயனே கட்டுவித்தான் என்பது தமிழர் வரலாறு சுட்டிக்காட்டுகின்றது.


No comments