நெடுந்தீவு சீனாவுக்கு:மறுக்கிறது இலங்கை!கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர்  சிவஞானம் சிறீதரன்   யாழ்ப்பாணம் நெடுந்தீவில் 40 ஏக்கர் கடலை கடலட்டைப் பண்ணை அமைக்க சீனாவுக்கு இடம் கொடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் அமைச்சரான நாமல் ராஜபக்ச அண்மையில் யாழ்ப்பாணம் வந்தபின்  கச்சேரிக்கு முன் உள்ள பழைய ஒல்லாந்தர்  கட்டமும் சீனாவுக்கு விற்கப்படவுள்ளதாவும் கூறியிருந்தார்.

இதனிடையே சி.சிறீதரன் கூறிய  குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என்றும், நெடுந்தீவில்உள்ள எந்த நிலத்தையும் அல்லது பழைய யாழ்ப்பாண கச்சேரி கட்டிடத்தையும்  எந்த வெளிநாட்டு நிறுவனத்திற்கும் விற்க எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் அரசு மறுத்துள்ளது.No comments