கோட்டை விட்ட கரவெட்டி:முன்னுதாரணமான யாழ்!யாழ்ப்பாணத்தில் சமூக இடைவெளி பேணாது வயது முதிர்ந்தவர்கள் வெயிலில் காத்திருந்து கொவிட் 19 தடுப்பூசி போடப்பட்ட விடயம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பிரிவில் கொவிட் 19 தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு நெல்லியடி மத்திய கல்லூரியில் நடைபெற்றிருந்தது.

கரவெட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட 35 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் போடப்பட்டிருந்தது.

கிராம சேவகர் பிரிவுகளை வகைப்படுத்தாது ஒழுங்குபடுத்தாமல் அனைத்து கிராம அலுவலகர் பிரிவுகளையும் ஒரே நேரத்தில் ஒரே இடத்திற்கு அழைத்து தடுப்பூசிகள் போடப்பட்டமையால் மக்கள் அல்லாடிதிரிந்தனர்.

கொரோனா தடுப்பூசி ஏற்றுவதற்கு வருகை தந்து அவ்விடத்திலேயே தொற்று ஏற்படும் அபாயம் ஏற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. 

சாதாரணமாக மரணச் சடங்கு, திருமண நிகழ்வு,  கோயில் நிகழ்வுகள் போன்றவற்றில் மக்கள் ஒன்று கூடினால் தனிமைப்படுத்த ஓடிவரும் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி முறையாக ஒழுங்குபடுத்தாமல் கோட்டடை விட்டுள்ளமை கேள்விக்குள்ளாகியுள்ளது.இதனிடையே யாழ்ப்பாணத்தில் தேர்தல் வாக்களிப்பு நிலையம் போல் ஒழுங்கமைப்புக்கள் செய்யப்பட்டு சேவை நடைபெற்றது. அரும்பணியில் ஈடுபட்ட உத்தியோகத்தர்களை மனதார பாராட்டி சென்றுள்ளனர் மக்கள்.


No comments