மலேசியாவில் தடுப்பூசி திட்டம் நிறைவடையும் வரை புலம்பெயர்ந்தோருக்கான பொது மன்னிப்பு காலம் நீட்டிப்பு


மலேசியாவில் பதிவு செய்யாத புலம்பெயர் தொழிலாளர்கள், மற்றும் சட்டவிரோத குடியேறிகளை முறைப்படுத்தும் திட்டத்தை வரும் டிசம்பர் 31 அல்லது கொரோனா தடுப்பூசி திட்டம் நிறைவடையும் வரை நீட்டிக்கும் முடிவினை மலேசிய அமைச்சரவை எடுத்துள்ளது. 

அதே சமயம், சாபா மற்றும் சாராவாக் மாநிலங்களில் அம்மாநில அரசுகளின் ஒப்புதலுக்கு உட்பட்டு புலம்பெயர் தொழிலாளர்களை முறைப்படுத்தும் திட்டத்தை விரிவுப்படுத்த மலேசிய அரசு முடிவெடுத்துள்ளது. 

கடந்த 2020 நவம்பர் 16 முதல் 2021 ஜூன் 30 வரை மலேசிய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை முறைப்படுத்தும் திட்டத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 248,083 குடியேறிகள் பதிவு செய்திருக்கின்றன.

பதிவு செய்யாத புலம்பெயர் தொழிலாளர்கள், மற்றும் சட்டவிரோத குடியேறிகளை முறைப்படுத்தும் இத்திட்டத்தின் கீழ், 97,892 வெளிநாட்டினர் சொந்த நாட்டிற்கு திரும்ப பதிவு செய்திருக்கின்றனர். அதே போல், மலேசியாவிலே தொடர்ந்து பணியாற்ற 149,889 வெளிநாட்டினர் பதிவு செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


No comments