கழுத்தை நெரிக்கிறது அரசு:போராட தடை!கொவிட் தொற்றுப் பரவலைக் கருத்திற்கொண்டு பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு மீள்அறிவித்தல் வரை தடைவிதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.

பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களின் போது பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பேணத் தவறுவதால்; தொற்று மிக வேகமாகப் பரவக்கூடும் என்பதால் இந்தத் தடையுத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே 60 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு இலங்கை முழுவதும் தடுப்பூசி வழங்கும் பணி இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புடையினரால் முன்னெடுக்கப்பட்ட ஊசி வழங்கலில் இடைவெளி பேணாது வயது முதிர்ந்தவர்கள் வெயிலில் காத்திருந்து தடுப்பூசி பெற்றுக்கொண்டமை விவாதத்திற்குள்ளாகியுள்ளது.

No comments