வாறாரு வாறாரு பஸில் வாறாரு!


முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் பெயர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டதையடுத்து நாளை மறுநாள் பதவியேற்கவுள்ளதாக தெரியவருகின்றது.

2005 இல் ஜனாதிபதியாக பதவியேற்ற மஹிந்த ராஜபக்சவும், பாதுகாப்புச்செயலாளராக செயற்பட்ட கோட்டாபய ராஜபக்சவும் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கையை முன்னெடுக்கiயில் பஸில் ராஜபக்சவே பொருளாதாரப் போரை முடிவுக்குகொண்டுவந்தார். எனவே, பஸிலின் வருகையால் நிச்சயம் மாற்றம் ஏற்படும்.” என்று அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன என்பவர் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன தலைமையிலான அரசை உருவாக்கியவர்களில் பஸில் ராஜபக்சவும் ஒருவர். அப்படி இருந்தும் அவர் நாடாளுமன்றம் வரவில்லை. கட்சிப்பணிகளை முன்னெடுத்தார். ஜனாதிபதியால் வழங்கப்பட்ட செயலணி பொறுப்பையும் நிறைவேற்றிவந்தார். எனவே, முன்னோக்கிச்செல்வதற்கு பஸிலின் மதிநுட்பம் எமக்கு அவசியம். அவர் திறமையானவர். அதனால்தான் அவரை நாடாளுமன்றம் வந்து, அமைச்சு பதவியை ஏற்றுமாறு நாம் கோரினோம். இம்முறை அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.

அவர் நாடாளுமன்றம் வருவார். அமைச்சராகவும் பதவியேற்றார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் எமது அரசுக்கு பக்கபலமாக இருப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.


No comments