ஆரம்பித்த வேகத்தில் முடிவடைந்த யாழ்ப்பாண ஆர்ப்பாட்டம்!

 


கொரோனாவை காரணங்காட்டி போராட்டங்களிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தடை தாண்டி  யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. 

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைத்து அரசியல் கைதிகளையும் உட விடுதலை செய்!, கொரோனா திறைமறைவில் எங்களை வதைக்கதே, அனைவருக்கும் தடுப்பூசி வழங்கு, பாதுகாப்பு வழிகளைச் செய்து பாடசாலைகளை தொடங்கு, உணவுப் பொருட்கள் - எரிபொருட்களின் விலையை உடனே குறை!, விவசாயிகள் - மீனவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிக்குத் தீர்வு காண்!, மற்றும் நிறுத்து நிறுத்து விலை உயர்வை நிறுத்து உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு வருகைதந்த யாழ்ப்பாண காவல்துறையினர் போராட்டத்தை நிறைவு செய்யுமாறு வலியுறுத்தியதை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்திருந்தது. 

அதேவேளை நேற்றைய தினம் பசில் அமைச்சராக பதவியேற்றத்தை கொண்டாடும் முகமாக பலர் ஒன்று கூடி யாழ்.நகர வீதிகளில் சென்றவர்களுக்கு இனிப்புக்கள் வழங்கி , வெடி கொளுத்தினர். அதற்கு பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாதது குறிப்பிடத்தக்கது.




No comments