திமுகாவில் ஐக்கியமாகும் மகேந்திரன்!

நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் படுதோல்வியை சந்தித்தது. இதைத்தொடர்ந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கூண்டோடு கட்சியில் இருந்து விலகினர். கமல்ஹாசனின் ஒருதலைப்பட்சமான முடிவு, தான்தோன்றித்தனமான நடவடிக்கை காரணமாக படு தோல்வி அடைந்ததாக விமர்சித்தனர்.

கமலின் மநீம கட்சியின் துணைத் தலைவராக இருந்தவர் டாக்டர் மகேந்திரன். இவர் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார் இதையடுத்து கட்சி தலைமைக்கும் அவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. இதையடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகிய டாக்டர் மகேந்திரன், தேர்தல் தோல்விக்கு கமல்தான் காரணம் என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்,

 இந்த நிலையில், மகேந்திரன் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், நாளை மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் தனது ஆதரவாளர்களுடன் மகேந்திரன் திமுகவில் ஐக்கியமாக இருப்பதாக கூறப்படுகிறது.

No comments