வடமராட்சி துன்னாலையில் இளம் குடும்பப் பெண் தீடிரென உயிரிழப்பு ! 

 


தண்ணீர் குடித்துவிட்டு படுத்துறங்கிய 5 பிள்ளைகளின் தயார் திடீரென இறந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் இந்திரம்மன் கோயிலடி துன்னாலை கரவெட்டியைச் சேர்ந்த சிவராசா வனஜா (வயது 43) என்பவரே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றுள்ளது. நேற்று உணவருந்திய போது வாந்தி எடுத்துள்ளார். அதன் பின்னர் அவர் சாதாரண நிலைக்கு திரும்பியதால் வீட்டில் தங்கிருந்தார். அதன் பின்னர் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணியளவில் பிள்ளைகளுக்கு தேநீர் வழங்கிவிட்டு தானும் தண்ணீர் குடித்துவிட்டு கட்டிலில் படுத்து உறங்கியபோது அவரின் உடல்நிலையில் மாற்றத்தை அவதானித்த போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அவசர கிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

No comments