கொழும்பில் கைது வேட்டை:யாழில் போராட்டம்!

 


முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு  இராமநாயக்க மாவத்தை பகுதியில் இன்று (07) காலை முன்னெடுக்கப்படவிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று தொடர்பில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெறாத போதும், சம்பவ இடத்திலிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலருடன் இருந்த துமிந்த நாகமுவவும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே எரிபொருள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு விடங்களை முன்வைத்து, யாழ். பிரதான பஸ் நிலையத்துக்கு முன்னால், சனிக்கிழமையன்று (10) காலை 9.30 மணிக்கு மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

அரசியல் கட்சிகள், வெகுஜன அமைப்புகள், விவசாய சம்மேளனங்கள், மீனவர் சங்கங்கள், இளைஞர் அமைப்புகள், சூழலியல் செயற்பாட்டாளர்கள், சமூக நலன்விரும்பிகள், கல்வியாளர்கள், மாணவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இதில் பற்கேற்றகவுள்ளனர்.

சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி இடம்பெறவுள்ள இந்தப் போராட்டத்தில், அனைவரையும் இணைந்துகொள்ளுமாறு இதன் ஏற்பாட்டாளர்களுள் ஒருவரான புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வட பிராந்திய செயலாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினருமான தோழர் செல்வம் கதிர்காமநாதன் அழைப்பு விடுத்துள்ளார்


No comments