தீவகத்திலும் கண்டம் ஆரம்பம்!
டக்ளஸ் தீவகத்திற்கு கொரோனா தடுப்பூசிகள் தொடர்பில் முன்னுரிமை வழங்க கோரிய போதும் ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட தம்பாட்டிப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர். பரிசோதனையில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் 869 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று பகல் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் புதிதாக 04 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

நேற்று முன்தினம் பிசிஆர் பரிசோதனையில் ஒருவரும், அன்டிஜன் பரிசோதனையில் 09 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

தம்பாட்டி நண்டுத் தொழிற்சாலை மொத்த தொற்றாளர் 25 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அல்லைப்பிட்டியில் உள்ள விடுதியில் பிறந்தநாள் கொண்டாடிய 19 பேர் அதே விடுதியில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.அத்துடன விடுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.

அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள  விடுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற 19 பேர் நண்பர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாடுவதற்கு முற்பட்டுள்ளனர்.

அதனை அறிந்த அந்தப் பகுதிக்கு பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகர், ஊர்காவற்றுறை பொலிஸாருடன் சென்று தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதாக 19 பேரையும் அந்த விடுதியிலேயே சுயதனிமைப்படுத்தினார்.
No comments