அலையும் உறவுகள்:நாடா தேடும் கூட்டமைப்பினர்!கடந்த 11முதல் 26 வருடங்களாக சிறை வைக்கப்பட்டுள்ள 60 தமிழ் அரசியல் கைதிகளின் முழுமையான பெயர் விபரங்கள் இலங்கையின் 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமது உறவுகளது விடுதலைக்காக உறவுகளும் நண்பர்களும் பாடுபட வெறுமனே ஊடகப்பேட்டி,பரபரப்பு அறிக்கையென அரசியல் செய்துவருகின்ற தமிழ் தரப்புக்கள.

அதிலும் கிழக்கில் புதித்துள்ள புதிய கூட்டமைப்பு தலைவர்கள் எங்கே நாடா,எங்கே திறப்பென அலைவரு பரிதாபகரமாகியுள்ளது.

அதிலும் நாடாவையும் திறப்பினையும் தேடி அலைந்து வென்ற பின்னர் சமூக ஊடகங்களில் சாதனை போல புகைப்படங்களை பதிவேற்றுவது வழமையாகும்.

நேற்றைய தினம் களுவாஞ்சிகுடியில் கொரோனா வைத்தியசாலை திறந்துவைக்கப்பட்ட நிலையில் தானும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனும் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டதை பெருமையுடன் பகிர்ந்துள்ளார் இரா.சாணக்கியன்.
No comments