தேசிய தலைவரை புகழ்ந்தாயா:உள்ளே தள்ளு!

தேசியத்தலைவரது ஆரம்பகால வரலாற்றினை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட மேதகு அனைத்து தரப்பினதும் கவனத்தை உலகெங்கும் ஈர்த்துள்ள நிலையில் மேலுமொரு தமிழ் இளைஞன் தலைவரை பற்றி முகநூலில் எழுதியதற்காக திருமலையில் 24 வயது இளைஞன் கைதாகியுள்ளான்.

ஏற்கனவே மட்டக்களப்பு ஊடகவியலாளர் ஒருவர் முகநூல் பதிவிற்காக கைதாகி மாதக்கணக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் கோப்பாயில் தலைவரது புகைப்படத்தை வைத்திருந்ததாக இளைஞன் ஒருவன் கைதாகியுள்ளான்.

இந்நிலையில் தற்போது திருமலையில் தமிழ் இளைஞன் ஒருவன் தேசிய தலைவரை புகழ்ந்து பதிவினை இட்டதாக கைதாகியிருப்பதாக இலங்கை காவல்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


No comments