தள்ளாடுகின்றது வடமராட்சி!

 


வல்வெட்டித்துறையை தொடர்ந்து பருத்தித்துறையும் மூடப்படுகின்றது! 

வல்வெட்டித்துறையினை தொடர்ந்து பருத்தித்துறை பொதுச்சந்தை தொகுதியும் முடக்கப்படவுள்ளது.

பருத்தித்துறை நகர மையப்பகுதியான சந்தை மேற்கு பகுதியில் இன்று ஐவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் எழுமாற்றாக இன்று முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையிலேயே தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது . அவர்களில் மூவர் சந்தை வியாபாரிகள் என்றும் இருவர் சந்தையை அண்டிய மேற்கு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர் .

இதனையடுத்து, பருத்தித்துறை சந்தையை தற்காலிகமாக மூடுவதா அல்லது கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதிப்பதா என்பது தொடர்பில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் ஆராய்ந்து வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஆலய திருவிழா ஒன்றில் பங்கெடுத்த இளைஞன் ஒருவனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளதையடுத்து பெரும் அச்சநிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே வடமராட்சி பகுதியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து வல்வெட்டித்துறை ஆதிகோயிலடி மற்றும் பருத்தித்துறை 401 கிராம அலுவலகர் பிரிவில் மேலும் சில பகுதிகளை முடக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

.


No comments