டெல்டா வைரஸ் தொற்று :யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில்!இந்தியாவை உலுக்கிப்போட்டா டெல்டா வைரஸ் தொற்று யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் கண்டறிப்பட்டுள்ளது.

கொழும்பில் அடையாளம் காணப்பட்ட கொரோனாவின் டெல்டா வைரஸ் திரிபு தற்போது வட  மாகாணத்திலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதி சுகாதார சேவை பணிப்பாளருமான விசேட வைத்திய நிபுணர் ​ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் டெல்டா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

குறித்த மூன்று பகுதிகளில் இருந்தும் 19  தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, கொழும்பு, பிலியந்தலை, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் இருந்து இதுவரை 38 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


No comments