தேரோட நேரஞ்சல்:நேரஞ்சல் செய்தவரும் உள்ளே

 

கொரோனா பெரும் தொற்று வடக்கில் மீண்டும் உச்சம் பெற்றுள்ள நிலையில் வல்வெட்டித்துறையினை தொடர்ந்து பருத்தித்துறை நகரப்பகுதியும்

முடக்கப்படவுள்ளது.

நாளை வெள்ளிக்கிழமை முதல் பருத்தித்துறை நகரப் பகுதியை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று  பருத்தித்துறையில் 206 பொதுமக்களிற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 40 தொற்றாளர்களும், இன்று முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் 5 பேருக்கும் என 45 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்தே பருத்தித்துறை நகரப் பகுதியை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகரை அண்டிய பகுதியில் பலர்  கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதால் சிவன் கோயில் தேர் திருவிழாவை நிறுத்துமாறு பொதுச் சுகாதார பரிசோதகர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருந்த போதிலும், அரசாங்கம் திருவிழாவை நடாத்துவதற்கு அனுமதி தந்து விட்டது. ஆகையால் தாம் நடாத்தப் போவதாக கூறி திருவிழா நிகழ்வை நடாத்தியுள்ளனர். 

இந்நிலையில் பருத்தித்துறை சிவன் ஆலயத்தில் இடம்பெற்ற தேர்த் திருவிழாவில் பங்கெடுத்த பக்தர் ஒருவர்  தனது தொலைபேசியில் அதனை நேரஞ்சல் செய்துள்ளார்.

அவ்வாறு முகநூலில் பதிவு செய்யப்பட்டவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனிடையே வடமராட்சி பகுதியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து வல்வெட்டித்துறை ஆதிகோயிலடி மற்றும் பருத்தித்துறையின் மேலும் சில பகுதிகளை முடக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


No comments