மீன்பிடி வேண்டாம்:விவசாயத்தை ஊக்குவிக்கும் டக்ளஸ்

 


பாண் சாப்பிடக்கேட்டவர்களிற்கு கேக் சாப்பிட சொன்ன அரசி பாணியில் மீன்பிடிக்க வசதி கேட்ட மீனவர்களிற்கு தரிசு காணிகளை வழங்கி விளம்பரப்படுத்தி அரசியலில் குதித்துள்ளார் டக்ளஸ்.

கடல்தொழிலையே பரம்பரை பரம்பரையாக செய்து வந்த கடற்றொழிலாளர்களை தீடிரென வயல் செய்ய விட்டால் எவ்வாறு செய்வார்கள்.அது வரையில் அவர்களது வாழவாதாரம் என்னவாகும். இது வரையில் விவசாயமே செய்யாதிருந்த வெறும் தரிசல் நிலத்தில் எவ்வாறு வயல் செய்வது? அது சரியாக வருமா ? என்று கேள்விகளும் எழுந்துள்ளன.

பூநகரி கௌதாரிமுனை பிரச்சினை டக்ளஸ்-சிறீதரன் அரசியலாகியுள்ளது. 

சிறீதரனின் மிரட்டலுக்கு மத்தியில் பொது மக்கள் காணி வழங்கி வைப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர என டக்ளஸ் தரப்பு பிரச்சாரப்படுத்திவருகின்றது.

கௌதாரி முனை கடல் அட்டை பண்ணை சர்ச்சைக்குரிய விடயமாக உள்ளது. இது இப்படி இருக்கும் பொழுது அந்த பிரச்சனையை விட்டுவிட்டு வயல்காணி வழங்கி வைப்பு இடம்பெறுகிறது என்றால் ஒரு கீறிய கோடை மறைக்க அதன் முன்னால் பெரிய கோடு கீறினால் முதல் கீறிய கோடு சிறிய கோடாக போய்விடும் இதுபோல்தான் கௌதாரிமுனை கடல் அட்டை பண்ணை பிரச்சனையாக உள்ள போது திடீரென வயல் காணி வழங்கி வைப்பது ஏன் என கேள்விகள் எழுந்துள்ளன.

டக்ளஸின் கைகளுள் சென்றுவிட்ட விநாயகர் கடல்தொழிலாளர் சங்க தலைவர்,செயலாளர்,ஆகியோர் மீது பல குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளது.

அவர்களே மீனவர்களிற்கு வயல்காணிகளை வழங்கி சீனர்களிற்கும் சிங்களவர்களிற்கும் கடலை விட்டுவிட தூண்டுவதாக கூறப்படுகின்றது.


No comments