புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்ட இளைஞன் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு மாவட்டம் இருதயபுரம் பகுதியில் வைத்து நேற்றுப் புதன்கிழமை 10.30 மணியளவில் கைது செய்யப்பட்ட 22 வயதுடைய சந்திரன் விதுஷன் எனும் 

இளைஞர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் வியாபாரம் இடம்பெறுவதாக புலனாய்வுத் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று கைது செய்யப்பட்ட இளைஞனே இன்று இவ்வாறு சடலமாக மீட்கப்படுள்ளார்.  

மேலும், தனது மகனை நேற்றிரவு கைது செய்து கொண்டுசென்று,  அடித்து சித்திரவதை செய்து கொலை செய்திருக்கலாமென உயிரிழந்தவரின் தாயார் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.  

இந்நிலையில், சம்பவ இடத்து வருகை தந்த மாவட்ட நீதவான் நீதிபதி கருப்பையா செல்வராணி சம்பவம் தொடர்பாக ஏறாவூர் காவல்துறையினர் விசாரணை நடத்த பணித்துள்ளார்.

No comments