மனைவியை தூக்கினார்: இலங்கை காவல்துறைக்குள் சண்டை!

தனது மனைவியை  உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) கடத்தி சென்றுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC) ஒருவர் இலங்கை

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.   

கிரிபத்கொட பொலிஸ் நிலையத்திலையே முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குற்றப்புலனாய்வு பிரிவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் அவரது காரில் தனது மனைவியை ஏற்றி செல்வதனை  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கண்ணுற்று காரினை துரத்தி சென்றுள்ளார். 

குறித்த கார் கொழும்பு கண்டி வீதியில் பயணித்து , பிறகு உள்வீதி ஒன்றினுள் திருப்பி வர்த்தகர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்துள்ளது.  

பின்னால் துரத்தி சென்ற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வீட்டிற்குள் சென்ற போது அங்கு வீட்டின் உரிமையாளர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் , பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் முரண் பட்டு அவரை மிரட்டி அனுப்பியுள்ளனர். 

அதனை அடுத்து கிரிபத்கொட பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனது மனைவி கடத்தி செல்லப்பட்டு மறைத்து வைக்கபப்ட்டுள்ளார் என முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். 

குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கம்பஹா மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றின் பொறுப்பதிகாரி ஆவார். அவர் வசிக்கும் இடம் கிரிபத்கொட பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியாகும். 

No comments