12 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து வீழ்ந்தது! 159 பேரைக் காணவில்லை!!


அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே 12 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது.

தகவலறிந்து தீயணைப்பு படை மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியுள்ள எஞ்சியவர்களை மீட்பவர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் 159 பேரை இன்னும் காணவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். கட்டிடத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது உறுதியாகத் தெரியவில்லை. டஜன் கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வியாழக்கிழமை அதிகாலை 40 ஆண்டுகள் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்ததற்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

No comments