கோத்தாவை நோண்டுகின்றனர் சட்டதரணிகள்?

கொலை குற்றவாளியான துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்கும்போது உரிய செயல்முறை பின்பற்றப்பட்டதா என்பது குறித்து

விளக்கம் அளிக்க கோரி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒரு கொலை குற்றவாளிக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும்போது, விசாரணையை மேற்கொண்ட நீதிபதி, சட்டமா அதிபர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோரின் பரிந்துரைகளை பெறவேண்டுமென அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதற்கான சூழ்நிலைகள் மற்றும் மன்னிப்பு பெற அவர் எப்படி தகுதியானவர் என்பதற்கு குறித்த சில்வா தேர்ந்தெடுக்கப்பட்ட அடிப்படையையும் பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.




No comments