கிளிநொச்சியில் துப்பாக்கிச்சூடு!கிளிநொச்சியில் இராணுவத்தினரின் கட்டளையை மீறி பயணித்த டிப்பர் வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

கிளிநொச்சி நாகேந்திரபுரம் பகுதியில் இன்றைய தினம் காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதில் சாரதியின் உதவியாளர் காயமடைந்த நிலையில் தர்மபுரம் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நாகேந்திரபுரம் பகுதியில் உள்ள இராணுவ சோதனை சாவடி ஊடாக மணல் ஏற்றிக்கொண்டு பயணித்த டிப்பர் வாகனத்தை சோதனை நடவடிக்கைக்காக மறித்த போது வாகனம் நிற்காது பயணித்தமையால் தாம் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக இராணுவ தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 


சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

No comments