கிளி ஆடைத்தொழிற்சாலையை திறக்க குத்துக்கரணம்?கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள போதும் பணியாளர்களுக்கு அன்ரிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மிகவும் குறைவானவர்களுக்கே கொறோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், ஆடைத் தொழிற்சாலையை விரைவில் இயங்க வைக்க முடியும் எனவும் கிளிநொச்சி மாவட்ட சுகாதாரப் பணிப்பாளரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

நேற்றைய தினம் அரச அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஆடைத் தொழிறசாலை நிர்வாகிகள், ஆடைத் தொழிற்சாலை தொடர்ந்தும் இயங்காமல் இருக்குமானால், பணியாளர்கள் வருமான இழப்பினை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என்பதை சுட்டிக்காட்டியதுடன், ஆடைத் தொழிற்சாலையின் செயற்பாடுளை நிறுத்தி வைக்கும் அளவிற்கு கொரோனா பரவல் ஆடை தொழிற்சாலை பணியாளர்கள் மத்தியில் அச்சுறுத்தலாக இல்லை என கூறியுள்ளனர்.

அப்போதே கிளிநொச்சி மாவட்டத்தில் சமூகப் பரவல் கணிசமானளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி சரவணபவன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலையில் மதியத்தின் பின்னரே கொரோனா வருவதாக இதே சுகாதார பணிப்பாளர் விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments