கொரோனா பரிசோதனையல்ல:மலசலகூடமே அவசரம்!



வடக்கு மாகாணத்தில் கொரோனாவுக்கு சேகரிகப்பட்ட நிதியில்  மலசல கூடம் அமைக்கும் அதிஉச்ச திட்டமிடலை அம்பலப்படுத்தியுள்ளார் ஊடகவியலாளர் ஒருவர்.

வடக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களிடம் ஆளுநரின் அறிவித்தலுக்கு அமைய கொரோனாவிற்காக திரட்டப்பட்ட 2 கோடியே 38 இலட்சம் ரூபா நிதியில் 30 இலட்சம் ரூபா நிதி தேசிய கொரோனா நிதியத்திற்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.

மிகுதி 2 கோடியே 8 இலட்சம்  ரூபாவை வடக்கில்; வீடு, மலசல கூடம் இல்லாதவர்களுக்கு செலவு செய்கின்றனர்.

வீட்டிற்காக ஒரு பயனாளிக்கு  ஒன்பது இலட்சம் ரூபா வீதம் 20 பயனாளிகளுக்கும், மலசல கூடத்திற்கு ஒரு பயனாளிக்கு 140000.00 ஆயிரம் ரூபா வீதம் 20 பயனாளிகளுக்கும் குறித்த நிதியை செலவு செய்யவுள்ளதாகவும் அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் கொரோனா பரிசோதனை ஆய்வு கூடத்துக்கு ஒரு புதிய தன்னியக்க பரிசோதனை செய்யும் இயந்திரம் தொழிலதிபர்  சுப்பிரமணியம் கதிர்காமநாதனால் (17.06.2021 இல்) வழங்கப்பட்டுள்ளது. 

இந்த இயந்திரத்தினுடைய பெறுமதி 4.65 மில்லியன். இங்கே இதை எடுத்து வருவதற்கு ஆகிய செலவுடன் மொத்தமாக 4.8 மில்லியன் ஆகியுள்ளது. 

வவுனியா உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரிசோதனை ஆய்வு கூடத்துக்கு ஆகக்குறைந்தது ஒரு கொரோனா பரிசோதனை செய்யும் இயந்திரமேனும் தேவையென்ற சூழலில் இவ்வாறு மலசல கூடங்களை அமைக்க திட்டமிட்ட அதிகாரிகளை பலரும் தேடிவருகின்றனர்.


No comments