நயினாதீவில் ராஜநாகங்கள்: புல்லரிக்கும் பக்தர்கள்!


வரலாற்று புகழ் மிகு நயினை ஆலயத்திற்கு நேற்று வருகை  ராஜநாகங்கள் பக்தர்களிடையே பக்தி பிரவாகத்தை தோற்றுவித்துள்ளது.

நேற்று முழுவதும் ஆலய சூழலில் காட்சி கொடுக்கும் இராஜநாகங்களை புகைப்படமெடுத்து பக்தர்கள் முகநூலில் பகிர்ந்துவருகின்றனர்.

காலையில் அன்னையின் வீதியில் பகல் காட்சி மீண்டும் அன்னை  நாகபூசணி அம்பிகை ஆலயத்தின் தீர்த்தக்கேணியில் இரவு காட்சி. எண்ணி வியக்கின்றோம் தாயே உந்தன் அற்புதங்களை என பக்தர்கள் சிலாகித்து வருகின்றனர்.

ஒரு பௌத்த குடும்பமுமே இல்லாத நயினாதீவில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதுடன் நயினாதீவை பௌத்த சிங்கள மயமாக்க இலங்கi அரசு முனைப்பு காட்டிவருகின்றது.

தேசிய வெசாக் கொண்டாட்டத்திற்கு அழைப்பு விடுக்கபட்ட நிலையில் ஜனாதிபதி கோத்தபாய முதன்முதலில் நயினாதீவு செல்ல திட்டமிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.No comments