யாரை விடுவிக்கிறார்கள்:நாய்பிடி நாடாளுமன்றில்!தமிழ் அரசியல் கைதிகளில் சிலரை விடுவிக்கவுள்ளதாக கோத்தபாய அறிவித்துள்ள நிலையில் தமிழ் தரப்புக்களது நாய்பிடி சண்டைகள் ஆரம்பமாகியுள்ளன.

குரைக்காமல் இரு இரு என சுரேன்ராகவனை பார்த்து எம்.ஏ.சுமந்திரன் சீற வாயை யோசித்து திறக்க சபாநாயகர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

விடுவிக்கப்படுபவர்கள் யார்,எத்தனை பேர்,அல்லது வழமையான அல்வாவாவென கேள்விகள் தொங்கிநிற்கின்றன.

எனினும் சுரேன் இராகவனை கிழித்து தொங்கவிட்டுவிட்டதாக சுமந்திரனின் ஆதரவாளர்கள் புல்லரித்துப்போயுள்ளனர்.

பொறுமையை சீண்டிய சுரேன் ராகவன் சூறாவளியாக பேசிய எம்.ஏ சுமந்திரன் அந்த சூநாய்க்கு குரைக்காமல் இருக்கும்படி சொல்லுங்கள்...!

இன்றைய பாராளுமன்ற உரையின் சொல்லப்பட்ட விடயங்கள் மிகவும் காத்திரமானது.

சுரேன் ராகவன் கூட சமூக வலைத்தளங்களில் அரசியல் கைதிகள் என கூறுகின்றார்.ஆக அரசாங்கத்தின் பக்கம் இருக்கும் உறுப்பினரும் கூறுகின்றார் அரசியல் கைதிகள் என்றே என எம்.ஏ.சுமந்திரன் கூற அதற்கு சுரேன்இராகவன் பதிலளிக்க நல்லாட்சியில் என்ன செய்தீர்கள் என ஆளும் தரப்பு கேட்க அரசியல் கைதிகளை விடுவித்தோம். ஆனால் அதை கருதவில்லை ஒவ்வொருவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.அரசியல் கைதிகளின் உயிரோடு விளையாட வேண்டாம். மிருசுவில் கொலையாளி என தண்டனை வழங்கப்பட்டவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.உங்களைப்போல அரசாங்கத்தின் காலணி நக்கிக் கொண்டு இருக்கவில்லையென்றார் எம்.ஏ.சுமந்திரன்.

நல்லாட்சியில்  என்ன செய்தீர்கள் என சுமந்திரனை பார்த்து கேட்க நாடாளுமன்றம் அல்லோகலப்பட்டிருந்தது.

எனினும் யாரை விடுவிக்கப்போகிறார்கள்  என்ற கேள்விக்கு இதுவரை பதிலில்லை.


No comments