பாராளுமன்றத்திற்குள் ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆர்ப்பாட்டம்

பாராளுமன்றத்திற்குள் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (23) காலை பாராளுமன்ற கூடியிருந்ததுடன், இதன்போது பதாதைகளை ஏந்தியவாறு எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் அத்தியவசிய பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


No comments