இலங்கையில் மீண்டும் மிதக்கும் சடலங்கள்!கைகள் கால்கள் கட்டப்பட்ட நிலையில் தலையில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் களனி கங்கையில் மிதந்து வந்த ஆணொருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். 

நவகமுவ பிரதேசத்தில் இன்று மதியம் மீட்கப்பட்ட குறித்த சடலமானது சுமார் 50 வயது மதிக்க தக்க ஆணொருவரது சடலம் எனவும் , சடலத்தின் கைகள் இரண்டும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு உள்ளதாகவும் , கால்களும் கட்டப்பட்ட நிலையில் தலையில் இரண்டு துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்தமைக்கான தடயங்கள் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அதேவேளை கடந்த 23ஆம் திகதி ஹங்வெல்ல பிரதேசத்தில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த நபர் ஒருவர் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் முறைப்பாடு  செய்யப்பட்டிருந்தது. 

அன்றைய தினம் கடத்தி செல்லப்பட்டவரது சடலமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

No comments