ஜேர்மனி கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் பலி!!


ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜேர்மனியின் பவாரியா பிராந்தியத்தில் உள்ள வர்ஸ்பர்க் நகரில் கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்தத் தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.

மேலும், கத்திக்குத்து தாக்குதலில் காயம் அடைந்தவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

சந்தேக நபரை துப்பாக்கிச்சூடு நடத்தி போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபருக்கு தொடையில் காயம் ஏற்பட்டுள்ளது.

முதல் கட்ட விசாரணையில், தாக்குதல் நடத்திய நபர் மன நலம் பாதிக்கபட்டவர் எனவும், சமீபத்தில் இதற்காக சிகிச்சை பெற்றிருப்பதாகவும் தெரிய வந்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.  

தாக்குதல் நடத்திய நபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது வீட்டில் சோதனை நடத்திய போலீசார், உறவினர்களிடம் விசாரித்து வருகின்றனர்


No comments