புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை மூடப்பட்டது!புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் பலர் மயங்கி விழுந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை மூடப்பட்டு பணியாளர்கள் வீடுகளுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்

முன்னதாக கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் திடீர் உடல்நிலை பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி காரணமல்ல என்றும் மன பிராந்தி காரணமாக அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் என கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சரவணபவன் தெரிவித்திருந்தார்;.

ஏற்கனவே கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலையில் மதியத்தின் பின்னராகவெ கொரோனா தாக்குவதாக வக்காலத்து வாங்கிய கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சரவணபவனின் புதிய வியாக்கியானத்தின் மத்தியில் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை மூடப்பட்டு பணியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


No comments