பொதுஜனபெரமுன குடுமிப்பிடி:தலையிட்டார் கோத்தா!



இலங்கையில் எரிபொருள் விலையேற்றம் ஆளும் பொதுஜனபெரமுனவினுள் குடுமிப்பிடி சண்டையினை தோற்றுவித்துள்ளது.

இந்நிலையில் கோத்தா மகிந்தவின்அழுக்கு அரசியலில் தன்னை பலியாக்கிவிட்டதாக தொடர்புடைய அமைச்சர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் எரிபொருள் விலை அதிகரிப்பானது தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் ஒரு பிரதான காரணி மாத்திரமே என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இந்த எரிபொருள் விலை அதிகரிப்பானது நாட்டின் வங்கி முறையை வலுப்படுத்தவும் ,குறைந்த வட்டி விகிதங்களை பராமரிக்கவும், அந்நியச் செலாவணி செலவினங்களை குறைப்பதற்கும், பரிமாற்ற வீதங்களை வலுப்படுத்தவும், சுகாதாரம் மற்றும் நலனைப் பாதுகாக்கவும், இறக்குமதி சார்ந்த  நுகர்வோர் பொருளாதாரத்தை உள்நாட்டு உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட  முதலீட்டு மற்றும் நுகர்வுப் பொருளாதாரமாக மாற்றவும் எடுக்கப்பட்ட முடிவாகும்.

மேலும் எரிபொருள் விலை அதிகரிப்பின் பிரதான பல காரணிகள் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் பிரதமர் மற்றும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடந்த வாழ்க்கைச் செலவு குழு கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments