வடக்கில் நேற்று 95:திறக்க சொல்லும் அதிகாரிகள்!யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 61 பேர் உட்பட வடக்குமாகாணத்தினைச் சேர்ந்த 95 பேருக்கு நேற்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வடமாகாணசபைக்குட்பட்ட அலுவலகங்களை திறந்து செயற்படுத்த அதிகார மட்டங்கள் முற்பட்டுள்ளன.

இன்று நடந்த உள்ளுராட்சி மன்ற செயலாளர்களுடனான சந்திப்பில் உள்ளுராட்சி மன்றங்களை திறந்து செயற்படுத்த உள்ளுராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் ,மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 42 பேர் உட்பட வடக்கில் 76 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் யாழ்.குடாநாட்டினைச் சேர்ந்த 19 பேர் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் முடக்கத்தை நீடிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகின்ற நிலையில் முந்திரிக்கொட்டை அதிகாரிகள் நிலமையினை சிக்கலாக்க முற்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 


No comments