வடிவேல் பாணி:நெடுந்தீவில் கட்டடத்தை காணோம்?நெடுந்தீவு மணல் கிணற்றுப் பகுதியில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் அமைக்கப்பட்ட நவீன சுற்றூலாவிடுதி காணாமல்போயுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டில் நெடுந்தீவின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்யும் நோக்கோடு சேவாலங்கா நிறுவனத்தால் இருபது இலட்சம் ரூபா நிதியில் குறித்த நவீன சுற்றுலா மையம் அமைத்துக் கொடுக்கப்பட்டது.

குறித்த கட்டடத்தில் சுற்றுலாப் பயணிகள் இளைப்பாறுவதற்கான மண்டபம் மற்றும் நீர் வசதிக்கான தண்ணீர் தாங்கி மற்றும் ஆண்கள், பெண்களுக்கான தனித்தனியான மலசலகூடவசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.

குறித்த கட்டடம் பராமரிப்புக்காகாவும் அதனூடாக வருமானம் பெறும் நோக்கோடும் நெடுந்தீவு கடற்றொழில் சங்கங்களின் சமாசத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மூன்று வருடங்களில் குறித்த சுற்றுலா மையம் முற்றாக அகற்றப்பட்டு தனியார் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நெடுந்தீவின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் எவரும் கேள்வியெழுப்பமை இதன் பின்ணணியில் அதிகாரிகளின் துணை இருக்கின்றதா? என்ற  சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

No comments