யாழ்.பள்ளிவாசலை தொடர்ந்து திருமலையில் நாகம்மாள்!யாழ்ப்பாண பள்ளிவாசலை தொடர்ந்து திருகோணமலை சம்பூர் தங்கபுரம் பகுதியிலுள்ள நாகம்மாள் ஆலயத்தில், வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த 12 பேர் கைது செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா சட்டவிதிகளை மீறி, பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த போதே, சம்பூர் பொலிஸார், இவர்களை கைது செய்தனர்.

கைதுசெய்யப்பட்ட 12 பேரும், நேற்று திங்கள் கிழமை (07) மூதூர் நீதவாhன் நீதிமன்றத்தில்

ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போதே, அவர்கள் 12 பேரையும், இம்மாதம் 21 ஆம் திகதிவரை தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்குமாறு மூதூர் நீதவான்,; பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

கொரோனா தொற்று நிலை காரணமாக அதிகளவானோர் ஒன்றுகூடுதல், மத ஸ்தலங்களில் கூட்டு வழிபாடுகள், களியாட்டங்கள் உள்ளிட்டவைகளுக்கு அரசாங்கத்தால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஏற்கனவே யாழ்ப்பாண பள்ளிவாசலில் தடையை மீறி வழிபாட்டிலீடுபட்டவர்களை அனுமதித்த வகையில் நிர்வாகம் அரசினால் கலைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments