திருமலை மீனவர்களை கண்டுபிடிக்க டக்ளஸிடம் கோரிக்கை!திருமலை திருக்கடலூரிலிருந்து கடற்றொழிலுக்கான சென்ற 03 பேர் 13 தினங்களை கடந்த நிலையில் கரை திரும்பாமல் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களை தேடிக் கண்டுபிடித்து தருமாறு கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு காணாமல் போன மீனவர்களின் தாயார் கோரிக்கை விடுத்தள்ளனர்.

மனுவாக அனுப்பிவைக்கப்பட்டுள்ள அக்கடிதத்தின் பிரதிகள்,  இலங்கைத் தூதரகம் - சென்னை , தமிழ்நாடு தூதுவர், இந்தியத் தூதரகம் - கொழும்பு , இலங்கை செயலாளர், கடற்றொழில் நீரியல் வள அமைச்சு , கொழும்பு ஆகியவற்றின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

ஜீவரெட்ணம் சரண்ராஜ்; (34 வயது),விஜேந்திரன் சஞ்ஜீவன் (21 வயது) மற்றும் சிவசுப்பிரமணியம் நதுஜன் (21 வயது) ஆகியோரே காணாமல் போயுள்ளனர்.  

கடந்த 29ம் திகதி சென்னைக்கும் இலங்கை கடலுக்கு இடையே  உள்ள எல்லையில்; படகினைக் கண்டதாகவும் படகில் யாரும் இருக்கவில்லை என்றும் நீர்கொழும்பைச் சேரந்தவர்கள் பெரிய படகில் மீன்பிடிக்க சென்ற போது கண்டதாக தேடிச்சென்ற கடற்றொழிலாளர்களிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மறுநாள் பிள்ளைகள் மூவரும்  தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருப்பதாக ஒரு தகவல் கிடைத்தது. எனினும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லையென தாயார் தெரிவித்துள்ளார்.


No comments