வீடுகளில் மரணம்:கிளிநொச்சியில் சமூக தொற்று?



கிளிநொச்சியில் வீட்டில் நோயுற்று மரணித்த இருவர் கொரோனா தொற்றாளிகளாக கண்டறியப்பட்டுள்ளமை சமூக தொற்று தொடர்பான அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

கண்ணகிநகர் பகுதியில் 67 வயதுடைய  முதியவரும், பெரிய பரந்தன் பகுதியில் 46வயதுடைய குடும்பஸ்தரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே கிளிநொச்சி மாவட்டத்திற்கு  அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொறோனா வைரஸ் பரவலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் அவரதுந பரிவாரங்களுடன் நடைபெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள், பாதுக்காப்பு தரப்பினர், பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர் .

பெரியபரந்தன் மற்றும் கண்ணகிநகரில் வீட்டில் இறந்து வைத்தியசாலைக்கு கொண்டு வந்த இருவருக்கும் தொற்று காணப்பட்டமை அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

இதனிடையே வடக்கின் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் இன்று சனிக்கிழமை பதிவாகியுள்ளது.முல்லைதீவு மாணிக்கபுரம் பகுதியை சேர்ந்த 44 வயதுடைய ஆண் ஒருவரே மரணித்துள்ளார்.



No comments