பிரித்தானியாவில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவு நாள்

12ம் ஆண்டு தமிழின அழிப்பு நினைவுநாள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் பிரித்தானிய அரசாங்கத்தின் கோவிட் 19 விதிமுறைகளுக்கு

அமைவாக, இல 10 downing Street க்கு முன்பாக காலை 10 மணிக்கு உணவு தவிர்ப்புப் போராட்டத்துடன் ஆரம்பமானது.

 அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய நிகழ்வில் ஈகைச் சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர் திரு ஈசன் அவர்கள் ஏற்றி வைத்தார் . தொடர்ந்து நினைவு படத்திற்கான மலர் மாலையினை முன்னாள் போராளிகளான திருமதி சாயந்தினி மற்றும் தர்சினி அவர்கள் அணிவித்தார்கள். இன்றைய இந்த நிகழ்வானது தொடர்ந்து இடம் பெற்று வருகிறது.

No comments