கைதானோர் விடுவிக்கப்பட்டனர்!அரசினது உத்தரவின் பேரில் இடித்தழிக்கப்பட்ட மீளக்கட்டப்பட்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் மாணவர்கள் தடைகளை தாண்டி நினைவேந்தலை இன்று காலை முன்னெடுத்துள்ளனர்.

இதனிடையே நினைவேந்தல் நிகழ்வை மாணவர்கள் நடத்த அனுமதித்தமை தொடர்பில் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் கோப்பாய் இலங்கை காவல்துறையால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்துக்குள் அனுமதித்தமை மற்றும் அங்கு நடைபெற்ற நிகழ்வு தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் கைது செய்யப்பட்டு கோப்பாய் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.

பின்னர் பல்கலை நிர்வாகம் ஊடாக இன்றைய தினம் கடமையில் இருந்த மேலும் மூவரை காவல் நிலையத்திற்கு அழைத்திருந்தனர். 

காவலாளிகள் ஐந்து பேரிடமும் விசாரணைகளை முன்னெடுத்த இலங்கை காவல்துறையினர்; அவர்களிடம் வாக்கு மூலம் பெற்றுக்கொண்ட பின்னர்இரவு விடுவித்துள்ளனர்.


No comments