அடங்க மறுத்துள்ள றிசாத்?

 
அடிபணிய வைக்கவென பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாட் பதியூதீன் அடங்க மறுக்கின்றார்.

மகிந்த அரசிற்கு கைதூக்கிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான அலி சப்ரி ரஹீம் மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகிய இருவரையும் கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

பாராளுமன்றத்தில்  கடந்த 20ஆம் திகதியன்று நடத்தப்பட்ட, கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் (போர்ட் சிட்டி) மீதான வாக்கெடுப்பின் போது, இவ்விருவரும் ஆதரவாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அது தொடர்பில் தன்னிலை விளக்கத்தை கோரும் வகையிலேயே இவ்விருவரும் கட்சி உறுப்புரிமையிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.


No comments